எந்த நேரத்திலும் பதவி விலக வாய்ப்பு...மீன்பிடிக்க தயாராகும் பாஜக...ஹேமந்த் சோரன் எடுத்த முடிவு..!

எந்த நேரத்திலும் பதவி விலக வாய்ப்பு...மீன்பிடிக்க தயாராகும் பாஜக...ஹேமந்த் சோரன் எடுத்த முடிவு..!

ஜார்கண்ட் மாநிலத்தில் அரசியல் பரபரப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், குதிரை பேரத்தை தடுக்க முதல்வர் ஹேமந்த் சோரன் தனது கட்சி எம்எல்ஏக்களை சத்தீஸ்கர் மாநிலத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

ஹேமந்த் சோரன் மீது பாஜக புகார்:

ஜார்க்கண்டில் காங்கிரஸ் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டவிரோத சுரங்க உரிமம் தொடர்பாக ஹேமந்த் சோரன் மீது பாஜக புகார் அளித்தது.

இதையும் படிக்க: https://www.malaimurasu.com/posts/cover-story/You-cant-imagine-how-scared-we-were-Taraiya-Massacre-Justice-will-be-served

எந்த நேரத்திலும் பதவி விலகலாம்:

பாஜக கொடுத்த புகாரை விசாரித்த,  தேர்தல் ஆணையம் ஹேமந்த் சோரனை தகுதி நீக்கம் செய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்தது. இதனால்,  ஹேமந்த் சோரன் எந்த நேரத்திலும் பதவி விலகலாம் என்ற சூழல் நிலவி வருகிறது.

யூகங்கள்:

ஹேமந்த் சோரன்  பதவி விலகும் நிலை ஏற்பட்டால் அடுத்த முதலமைச்சராக தனது கட்சியை சேர்ந்தவரையோ அல்லது காங்கிரஸ் தரப்பைச் சேர்ந்தவரையோ சோரன் தேர்வு செய்வாரா? என்பது குறித்து பல்வேறு யூகங்கள் வெளியாகி வருகின்றன.

எம்எல்ஏக்களை பாதுகாக்க சோரன் முயற்சி:

இதனிடையே, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் வேலையில் பாஜக இறங்கும் என்பதால் தனது எம்எல்ஏக்களை பாதுகாக்கும் வேலையில் முதல்வர் ஹேமந்த் சோரன் இறங்கியுள்ளார். இதையடுத்து  2 சொகுசுப் பேருந்துகளில் எம்எல்ஏக்களை அவர் சத்தீஸ்கருக்கு அனுப்பி வைத்துள்ளார். முதலில், மேற்குவங்க மாநிலத்திற்கு அனுப்ப இருந்த நிலையில் பின்னர் காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கருக்கு அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.