ஹைதராபாத் விடுதலை நாள் கொண்டாட்டம்.! அமித்ஷா பங்கேற்பு..!

ஹைதராபாத் விடுதலை நாள் கொண்டாட்டம்.! அமித்ஷா பங்கேற்பு..!

உள்துறை அமைச்சர் அமித்ஷா தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற விடுதலை நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 1948 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் ஹைதராபாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

இந்த நாளை கடந்த ஆண்டு முதல் விடுதலை நாளாக அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று ஹைதராபாத்தில் உள்ள அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற விழாவில்  உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று தேசியக் கொடி ஏற்றினார். முன்னதாக வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

இதையும் படிக்க   |  "அவதூறு அண்ணாமலை என்று பெயர் வைத்ததே நான்தான்" துரை வைகோ பேச்சு!