ஆப்பிள் இறக்குமதி கொள்கையை 'திருத்துகிறது' இந்தியா.....!

ஆப்பிள் இறக்குமதி கொள்கையை  'திருத்துகிறது'  இந்தியா.....!

கடந்த 2018 -ம் ஆண்டு அலுமினியம், ஸ்டீல் உள்ளிட்ட இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதித்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய அரசு 29 பொருட்கள் மீது வரி விதிக்க உள்ளதாக கூறியது.

ஆனால், அது தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு 2019 ஜூன் 16-ம் தேதி முதல் வாஷிங்டன் ஆப்பிள், உலர் பழங்கள் உள்ளிட்ட 28 பொருட்களுக்கு சுங்கவரியை இந்தியா உயர்த்தியது. எனவே வாஷிங்டன் ஆப்பிள் மீது 20 சதவீத சுங்க வரி விதித்தது . அப்போது, 2017-ம் ஆண்டு இந்தியா 70.8 இலட்சத்து  18 கிலோ வாஷிங்டன் ஆப்பிள் பெட்டிகளை இந்தியா இறக்குமதி செய்திருந்தது. அந்நாள் அது  2018-ம் ஆண்டு 80 லட்சம் பெட்டிகளாக அதிகரித்தது.

தொடர்ந்து வாஷிங்டன் ஆப்பிள் இறக்குமதி செய்வதில் கனடாவை பின்னுக்குத் தள்ளி 2-ம் இடத்தை இந்தியா பிடிக்க இருந்தது. வாஷிங்டன் ஆப்பிளை அதிகளவில் இறக்குமதி செய்வதில் மெக்ஸிகோ முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்னிலையில்,  அமெரிக்காவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யும் ஆப்பிள்கள் மீதான வரியை நீக்க  வேண்டும் என்று வாஷிங்டன் எம்பிக்கள் அதிபர் பைடன் நிர்வாகத்தை வலியுறுத்தினர். அதன்படி, அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க ஆப்பிள்கள் மீதான வரியை குறைப்பதற்கு உதவ வேண்டும் என வலியுறுத்தினர். அப்போது, அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு இந்தியா அரசின்  பதிலடி நடவடிக்கை காரணமாக பழ தொழில் நஷ்டத்தை சந்தித்தது. 

India amends apple import policy - Times of India

புதிய வரிகளை அமல்படுத்துவதற்கு முன்பு  அமெரிக்காவின் இரண்டாவது ஏற்றுமதி சந்தையாக இந்தியா திகழ்ந்தது.   ஆப்பிள்கள், செர்ரிகள் மற்றும் பேரிக்காய்களில் 30 சதவீதம் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது இந்திய அரசின் வரிகள் விதிப்பால் ஆப்பிள் விவசாயிகள் இந்திய சந்தையை  இழந்தனர்.

இந்நிலையில், எங்கு சிஐஎஃப் (செலவு காப்பீடு மற்றும் சரக்கு) இறக்குமதி விலை ரூ. 50-க்கு குறைவாகவோ அல்லது அதற்கு சமமாகவோ இருக்குமோ, அங்கெல்லாம் ஆப்பிள்களை இறக்குமதி செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இவ்வாறிருக்க, ஆப்பிள் இறக்குமதிக் கொள்கையின்  திருத்தம் இந்தியாவின் அண்டை நாடான பூடானுக்குப் பொருந்தாது என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும், ஆப்பிள் இறக்குமதி கொள்கையில் ஏன் திருத்தம் தேவை என்று DGFT தனது அறிவிப்பில் எந்த காரணத்தையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிக்க    } 1200 ரூபாய்க்கு சிலிண்டர் விலை........ பாஜக அரசை கேள்வி கேட்க முடியாத அடிமையாக அதிமுக,.... ! - செந்தில் பாலாஜி.