2 பில்லியன் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய மைல்கல்லை எட்டியது இந்தியா!!

2 பில்லியன் தடுப்புசிகள் இந்தியர்கள் செலுத்திய நிலையில், புதிய மைல்கல்லை எட்டியது இந்தியா. அதிகரித்து வரும் கொரோனா பரவலுக்கு இடையில் இது ஒரு பெரிய அடியாக காணப்படுகிறது.

2 பில்லியன் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தி புதிய மைல்கல்லை எட்டியது இந்தியா!!

இந்த ஞாயிற்றுக் கிழமையோடு, தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் கீழ், 200 கோடி மைலகல்லை எட்டி இருப்பதால், பெரும் சாதனைப் படைத்துள்ளது. இந்தியாவின் சுகாதார்த்து துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைகளின் படி, கிட்டத்தட்ட 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 98% மக்கள் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், 90% பேர் முழுமையாக அனைத்து தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தது.

மேலும், ஜனவரி 3ம் தேதி தொடங்கப்பட்ட தடுப்பூசி முகாம்களைத் தொடர்ந்து, 15-ல் இருந்து 18 வயதுக்கு உட்பட்டவர்களில், 82% க்கு மேற்பட்டோர் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், 68% க்கு மேற்பட்டோர் இரண்டு டோஸ்களையும் போட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த தகவலை வெளியிட்ட சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர், டாக்டர் மன்சுக் மாண்டவியா, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதற்கு, பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்திருந்தார். அதில், "இந்தியா மீண்டும்வரலாறு படைத்துள்ளது. 200 கோடி மைல்கல்லை எட்டிய இந்தியர்களுக்கு எனது வாழ்த்துக்கள். ஈடு இணையற்ற இந்த வளர்ச்சியிலும், அதன் வேகத்தில் பங்கு வகித்த அனைத்து இந்தியர்களுக்கும் நன்றி. இதனால், கொரோனாவிற்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்கு வலுகொடுக்கிறது” என்றும் பதிவிட்டிருந்தார்.

12-14 வயதிற்குறியவர்களில் 81% ஒரு டோசும், 56% முழு டோசும் செலுத்தியுள்ளனர். மேலும், நடத்தப்பட்ட கோவிட் தடுப்பூசி முகம்களில் மட்டுமே 71 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகள் கிராமப்புறங்களில் போடப்ப்பட்டதாகவும், 29 சதவீதம் பேருக்கு நகரப்புறங்களில் போடப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், மொத்த டோஸ்களில் 48.9% பெண்களுக்கும், 51.5% ஆண்களுக்கும், 0.02% மற்றவர்களுக்கு செலுத்தப்பட்டதாகவௌம் வெளியான அறிக்கை தெரிவிக்கின்றன.

2020ம் ஆண்டு தொடங்கிய இந்த கொரோனா பிரச்சனை, இன்று உலகையே ஸ்தம்பித்து வைத்திருக்கும் நிலையில், தடுப்பூசி மட்டுமே ஆபத்பாந்தவனாக இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், உலக அளவில் பல வகையான எதிர்ப்புகள் தெரியவந்தாலும், இந்தியாவில், தடுப்பூசிக்கான விழிப்புணர்வு வந்து மக்கள் அதீத அளவில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருவது மக்களுக்கு மனதைரியத்தை அதிகரிக்கிறது எனத் தெரிகிறது.