இந்தியா- சீனா இடையே மீண்டும்  பேச்சுவார்த்தை  

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்த இந்தியா- சீனா நாடுகள் முடிவு செய்துள்ளன.

இந்தியா- சீனா இடையே மீண்டும்  பேச்சுவார்த்தை   

லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக மீண்டும் பேச்சுவார்த்தையை நடத்த இந்தியா- சீனா நாடுகள் முடிவு செய்துள்ளன.

கிழக்கு லடாக் பகுதியில் நடந்த மோதலுக்கு பின், இரு நாடுகளும் எல்லையில் படைகளை குவித்தன. படைகளைத் திரும்பப்பெற்று அமைதியை நிலைநாட்ட, படைத்தளபதிகள் தலைமையில் ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இதன்பயனாக  பாங்காங் சோ, கோக்ரா, உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகள் விலக்கப்பட்டன. ஆனால் டாஷிகோங், மான்சா, ஹாட் ஸ்பிரிங்ஸ் உள்ளிட்ட  பகுதிகளில் படைகளை நிலைநிறுத்தியிருந்த சீனா, அருணாச்சல பிரதேச எல்லை கட்டுப்பாட்டு அருகே, ஆயுத தளவாடங்களை நிறுத்தி அச்சுறுத்தல் விடுத்தது. இதுதொடர்பாக நடைபெற்ற 13வது சுற்று பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இந்தநிலையில், படைகளை விலக்குவது தொடர்பாக மீண்டும் ஒரு பேச்சுவார்த்தைக்கு சீனா  ஒப்புக்கொண்டுள்ளதாகவும்,  ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து படைகளை விலக்குவது குறித்து விவாதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இதற்கான தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.