கோடி கணக்கிலான வாக்காளர்களின் தகவல் கசிவு?

கேரளாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது கோடி கணக்கிலான வாக்காளர்களின் தகவல் கசிந்ததால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.  

கோடி கணக்கிலான வாக்காளர்களின் தகவல் கசிவு?

கேரளாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது கோடி கணக்கிலான வாக்காளர்களின் தகவல் கசிந்ததால் மக்கள் அச்சத்தில் வாழ்ந்து வருகின்றனர்.  

கேரளாவில் கடந்த ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு முன்பாக மாநிலத்தில் கோடிக்கணக்கான வாக்காளர்களுக்கு இரட்டை வாக்குகள் இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அந்தவகையில் 140 சட்டசபை தொகுதிகளிலும் சுமார் நான்கரை கோடி போலி வாக்காளர்கள் இருப்பதாக கூறி அந்த பட்டியலை முந்தைய எதிர்க்கட்சி தலைவரான ரமேஷ் சென்னிதலா வெளியிட்டார்.

இந்த குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட மாநில தலைமை தேர்தல் அதிகாரியான தீக்காராம் மீனா, எனினும் வெறும் 38 ஆயிரம் பேருக்கு இரட்டை வாக்குகள் இருப்பதாக உறுதிப்படுத்தினார். இதுதொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர்நீதிமன்றம், மாநிலத்தில் ஒரு வாக்காளருக்கு ஒரு ஓட்டு மட்டுமே இருப்பதை உறுதி செய்யுமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.