சர்வதேச பயணங்களை எளிதாக்க வேண்டும்- பிரதமர் மோடி

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் விவகாரத்தில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான விதிமுறைகளை கடைபிடிக்கும் நிலையில், பரஸ்பர அங்கீகாரம் வாயிலாக, சர்வதேச பயணங்களை எளிதாக்க வேண்டும், என, பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நான்கு நாள் பயணமாக நேற்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்பாடு செய்திருந்த சர்வதேச கொரோனா உச்சி மாநாட்டில், காணொலி மூலம், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், உலகின் பல நாடுகளில் தடுப்பூசியின் தேவை உள்ளது என்றும், இந்த நேரத்தில், பைஸர் தடுப்பூசி கொள்முதலை இரட்டிப்பாக்கி, அதை தேவை உள்ள நாடுகளுக்கும் வழங்க உள்ளதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்து இருப்பது வரவேற்கதக்கது எனவும் குறிப்பிட்டார்.

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் வழங்குவதில் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான நடைமுறையை பின்பற்றுவதை சுட்டிக் காட்டி பேசிய பிரதமர் மோடி, இதில், பரஸ்பர அங்கீகாரத்தை பின்பற்றுவதன் வாயிலாக சர்வதேச பயணங்களை எளிதாக்க வேண்டும் என்றும், குறிப்பிட்டார்.