'கர்நாடக தேர்தல்' தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறதா காங்கிரஸ்?

'கர்நாடக தேர்தல்' தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கிறதா காங்கிரஸ்?

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவை பின்னுக்குத்தள்ளி பல தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வரும் நிலையில், தனிப்பெரும்பான்மையுடன அக்கட்சி ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

224 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல், கடந்த 10ம் தேதி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடும் பாதுகாப்புக்கு மத்தியில் 36 வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. ஆரம்பத்தில் பாஜக வெற்றி முகத்தில் இருப்பதுபோல் தோன்றிய நிலையில், 125 தொகுதிகளில் காங்கிரசும், 69 தொகுதிகளில் பாஜகவும் முன்னிலை வகித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதச்சார்பற்ற ஜனதா தளம் 26 தொகுதிகளிலும் மற்ற கட்சிகள் 6 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் ஆட்சியை தக்கவைக்கும் நடைமுறை இல்லை என்ற 36 ஆண்டுகால வரலாறு, தற்போதும் அரங்கேறும் எனத் தெரிகிறது. அதன்படி தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், 130 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது. Congress Chalks Out Public Outreach Plan In Poll-Bound Karnataka

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கனகபுரா தொகுதியிலும், மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே சித்தாபூரிலும், அதானி தொகுதியில் லக்ஷ்மண் சாவடியும் என 26 காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஷிகோன் தொகுதியில் வெற்றி பெற்றது உள்ளிட்டு 11 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் முடிவை பாஜக ஏற்றுக் கொள்வதாக பசவராஜ் பொம்மை பேட்டியளித்துள்ளார்.  இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் காங்கிரசார் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். Karnataka Election Result 2023: Congress Legislature Party Meeting Tomorrow  As It Expects To Form Govt With

தொடர்ந்து வெற்றிமுகம் காணும் காங்கிரஸ் வேட்பாளர்கள், பெங்களூரு வருமாறு கட்சி மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. வெற்றி பெறும் எம்எல்ஏக்களை, தமிழ்நாடு அழைத்து வந்து பாதுகாக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பெங்களூருவில் நாளை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க:"கர்நாடக தேர்தல் தோல்வி குறித்து ஆராயப்படும்" பசவராஜ் பொம்மை!!