இஸ்லாமிய மாணவர்கள் ஒரே இந்தியாவாக இருக்க விரும்புகிறார்கள்... ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு...

370- வது சட்டப்பிரிவை நீக்கிய பின்னர்காஷ்மீர் மாநிலத்தில் பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடவில்லை என தெரிவித்துள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத். பாகிஸ்தானின் அழுத்தத்தால் வகுப்புவாத உணர்வோடு செயல்படுவதாக தெரிவித்துள்ளார்.

இஸ்லாமிய மாணவர்கள் ஒரே இந்தியாவாக இருக்க விரும்புகிறார்கள்... ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு...

நாக்பூரில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட அவர் அண்மையில் ஜம்மு காஷ்மீருக்குச் சென்றிருந்த்தாகவும்.  முதல்முறையாகச் பல்வேறு இடங்களை சென்று பார்த்த்தாகவும் கூறினார். 370-வது சட்டப்பிரவு ரத்து செய்யப்பட்ட பிறகும் பலர் சுதந்திரம் என்ற வார்த்தையை பயன்படுத்தி வருவதாக கூறினார். அவர்களிடம் ஓருமைப்பாட்டு உணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றார்.

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் கடந்தமாதம் மும்பை வந்திருந்ததாகவும். அவர்கள் எவ்வித தடையுமின்றி இந்தியராகவும் இந்தியாவின் ஒருபகுதியாகவும் இருக்க விரும்புகிறார்கள் என்றும் மோகன் பகவத் கூறினார்.

முன்பு ஜம்மு பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாகவும் மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார் பாரத தேசத்துடன் ஜம்மு காஷ்மீரை ஒருங்கிணைப்பதற்கான முயற்சிகளை துரிதப்படுத்த வேண்டும் என்ற மோகன் பகவத், ஜம்மு காஷ்மீர் மக்கள் இந்திய தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று உணர வேண்டும் என வலியுறுத்தினார்.