மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார் எல்.முருகன்

மத்திய பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் முன்னிலையில் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழக பாஜக தலைவராக இருந்த எல். முருகன் பின்னர் மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் பதவி உயர்வு பெற்ற ஓரிரு மாதங்களில் அவரை, மத்திய பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிக்கான வேட்பாளராக பாஜக தலைமை அறிவித்தது. அங்கு மாநிலங்களவைக்கான தேர்தல் அக்டோபர் 4ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், எல். முருகன் மத்திய பிரதேசத்தில் வேட்பு மனுதாக்கல் செய்தார். மத்திய பிரதேசத்தில் பாஜக உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இருப்பதால், முருகன் உறுப்பினராக தேர்வாவதில் சிக்கல் இருக்காது.