ஆந்திராவில் காற்றாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கூலி தொழிலாளி!!

ஆந்திராவில் காற்றாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கூலி தொழிலாளி!!

ஆந்திரா மாநிலம் ஏலுறு மாவட்டம் கண்ணாபுரம் அருகே காற்றார் வெள்ளத்தில் கூலி தொழிலாளி ஒருவர் அடித்து செல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காற்றாறில் வெள்ளப்பெருக்கு:

கடந்த சில நாட்களாக தெலுங்கானா ஆந்திரா மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக பல்வேறு இடங்களில் நதிகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று ஏலுறு மாவட்டத்தில் பலத்த மழை பெய்த நிலையில் கண்ணாபுரம் அருகே ஒரு காற்றாறில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

அந்த காற்றாறு வெள்ளப்பெருக்கில், கூலி தொழிலாளி ஒருவர் ஆற்றை கடக்க முயன்றார். அந்த நபரை அருகிலிருந்தவர்கள் பல முறை எச்சரித்ததாக கூறப்படுகிறது.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர்:

அதனை எல்லாம் உதாசினம் செய்து விட்டு ஆற்றை கடக்கும் முடிவில் இறங்கினார். பாதி தூரம் சென்ற பிறகு அலைகளில் வேகத்தை தாங்க முடியாமல் தடுமாறி நின்ற நபர்.. பாய்ந்து வந்த வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். வெள்ளத்தில் அடித்த செல்லப்பட்ட கூலி தொழிலாளியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்படுத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.