லக்கிம்பூர் வன்முறை வழக்கு - மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைது  

லக்கிம்பூர் வன்முறை மற்றும் விவசாயிகள் படுகொலை வழக்கில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

லக்கிம்பூர் வன்முறை வழக்கு - மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா கைது   

லக்கிம்பூர் வன்முறை மற்றும் விவசாயிகள் படுகொலை வழக்கில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதியதால் ஏற்பட்ட வன்முறையில், 4 விவசாயிகள் உள்பட 9 பேர் கொல்லப்பட்டனர். விவசாயிகள் மீது மோதிய காரில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாகவும், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும், விவசாயிகள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனையடுத்து, போலீசார் புதிய சம்மன் அனுப்பினர். அதன்படி, விசாரணைக்கு ஆஜரான ஆஷிஷ் மிஸ்ராவிடம் போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அப்போது, அவரது செல்போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். 10 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணைக்கு ஆஷிஷ் மிஸ்ரா முழு ஒத்துழைப்பு கொடுக்காததால், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. உபேந்திர அகர்வால் தெரிவித்துள்ளார். மேலும், சில கேள்விகளுக்கு பதில் அளிக்காததால் கைது செய்யப்பட்டதாகவும், விரைவில் ஆஷிஸ் மிஸ்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும், டி.ஐ.ஜி. கூறியுள்ளார்.