மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் நிலச்சரிவு, ஒருவர் பலி ; 2 பேர் படுகாயம் :

மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழையால் பால்கர் மாவட்டத்தின் வசாய் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர உயிரிழந்துள்ளதாகவும், 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார் என பல்கார் மாவட்ட பேரிடம் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் நிலச்சரிவு, ஒருவர் பலி ; 2 பேர் படுகாயம் :

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை, தானே மற்றும் ராய்காட் மற்றும் பல்கார் போன்ற இடங்களில் கனமழை பெய்து வருவதால், வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த கனமழை காரணமாக பல இடங்களில் பாலங்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் மகாராஷ்டிராவின் பல்கார் மாவட்டத்தின் வசாய் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ராஜாவலி பகுதியில் உள்ள வக்ரால்பாடாவில் காலை 6.30 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதில் அனில் சிங் (45) என்பவரின் வீட்டின் மீது மலையிலிருந்து ஒரு பாறாங்கல் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் (NDRF) வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் அனில் சிங் உயிரிழந்துள்ளார். மேலும் அவரது குடும்ப உறுப்பினர்களான அவரது மனைவி மற்றும் மகன் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவரது மற்றொரு குடும்ப உறுப்பினரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கிறார்களா என்பதைக் கண்டறியும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. இதனை மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு தலைவர் விவேகானந்த் கதம் உறுதிப்படுத்தியுள்ளார். 

பின்னர் NDRF பணியாளர்கள், காலை 10.30 மணியளவில் அனில் சிங்கின் உடலை இடிபாடுகளில் இருந்து மீட்டனர் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். மாநில தலைநகர் மும்பையில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த மாவட்டத்தில் நேற்று  இரவு முதல் கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.