சுதந்திரமாக வாழ ‘லிவ் இன் ரிலேசன்’ வாழ்க்கை முறையா? - நீதிமன்றம் வேதனை!

சுதந்திரமாக வாழ ‘லிவ் இன் ரிலேசன்’ வாழ்க்கை முறையா? - நீதிமன்றம் வேதனை!

சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காக இன்றைய இளைஞர்களிடம் ‘லிவ் இன் ரிலேசன்’ வாழ்க்கை முறை அதிகரித்து வருவதாக கேரள உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது  

விவாகரத்து கோரிய மனு:

கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த ஒருவர் விவாகரத்து கோரி உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் முகமது முஸ்தாக் மற்றும் சோபி தாமஸ் ஆகியோர் அமர்வில்  விசாரிக்கப்பட்டு இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் , கலாச்சாரம் என்பது "யூஸ் அண்ட் த்ரோ"  எனும் முறையால் மிக பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர். 

"லிவ் இன் ரிலேஷன்ஷிப்" முறை அதிகரிப்பு:

தொடர்ந்து, தற்போதைய கலாச்சார  நடைமுறை  பலருடைய திருமண பந்தத்தை பாதித்து உள்ளதாக கவலை தெரிவித்த நீதிபதிகள், சுதந்திரமான வாழ்க்கைகையை அனுபவிக்க திருமணத்தை தவிர்த்து வருவதால்  "லிவ் இன் ரிலேஷன்ஷிப்" உறவுகள் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டினர்.

இதையும் படிக்க: என்னது...ஓபிஎஸ் அணியில் இணைகிறேனா? கொந்தளித்த பிரபலம்...!

மேலும்  சுயநலத்திற்காக குழந்தைகளை பற்றி கூட கவலைப்படாமல் கணவன்-மனைவி இடையேயான பந்தம் உடைவதாகவும், இதனால் பல குடும்பங்களில் இருந்து வரும் அலறல் சத்தம் பலரது மனசாட்சியை உடைக்க செய்வதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

வேதனை தெரிவித்த நீதிபதிகள்:

குடும்பச் சண்டை, குழந்தைகளை பிரிந்து வாழ்தல், கணவன் மனைவி விவாகரத்து என்பது அதிகரித்தால் சமூகத்தின் அமைதி சீர்கெட்டு விடும் என கவலை தெரிவித்த நீதிபதிகள், இளைஞர்கள் WIFE என்ற வார்த்தையை  'Worry Invited For Ever' என புரிந்து கொண்டுள்ளதாக தீர்ப்பில் தங்கள் வேதனையை பதிவு செய்தனர்.