எருமை மாடு "பால் கறக்க மறுக்கிறது" - காவல் நிலையத்தில் விவசாயி விநோத புகார்

எருமை மாடு பால் கறக்க மறுப்பதாக மாட்டின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்த விநோத சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

மத்தியப் பிரதேச மாநிலம் பிந்த் மாவட்டத்தில் தான் இப்படியொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கிணத்தை காணோம் என காவல் நிலையத்தில் புகார் அளித்த நடிகர் வடிவேலு பாணியில் மாடு பால் கறக்க மறுப்பதாக கவால் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் விவசாயி ஒருவர்.

45- வயது மதிக்கதக்க பாபுலால் ஜாதவ் என்ற விவசாயி தனது எருமை மாட்டை அழைத்துக்கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்றதுடன் எருமை மாடு பால் கறக்க மறுப்பதாகவும் கிராம மக்கள் தனது மாட்டுக்கு சூனியம் வைத்து விட்டதாகவும் புகார் அளித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ந்து போன காலவர்கள் புகாரை வாங்கி வைத்துக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி விவசாயியை அனுப்பி வைத்துள்ளனர்.