நடன பெண்களின் கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை... கங்கனா ரனாவத்துக்கு அமைச்சர் பதிலடி...

மகாத்மா காந்தி குறித்து சர்ச்சை கருத்து கூறிய நடிகை கங்கானாவுக்கு மகாராஷ்டிர அமைச்சர் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

நடன பெண்களின் கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை... கங்கனா ரனாவத்துக்கு அமைச்சர் பதிலடி...

தேசத்தந்தை மகாத்மா காந்தி குறித்து சர்ச்சை கருத்து கூறிய நடிகை கங்கானாவுக்கு மகாராஷ்டிர அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான விஜய் வதேட்டிவார் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய சுதந்திரத்தைப் பற்றி இழிவான கருத்து தெரிவித்திருந்த கங்கனா ரனாவத் தற்போது மகாத்மா காந்தி குறித்து சர்ச்சைக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

1940-ல் வெளியான செய்தித் தாளின் சில பழைய கட்டுரைகளை மேற்கோள் காட்டி மகாத்மா காந்தியை அவமதிக்கும் வகையில் கங்கனா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதற்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் மகாராஷ்டிர அமைச்சர் விஜய் வதேட்டிவார் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

கங்கனாவை ஆட்டகாரி என அழைத்த அவர், மகாத்மா காந்திக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் சில நடன பெண்களின் கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை எனவும், சூரியனை நோக்கி யாராவது துப்பினால் அது அவர்களின் முகத்தில் தான் விழும் எனவும் விமர்சித்தார்.