மொஹரம் - பிரதமர் வாழ்த்து!!!

முகமது நபியின் பேரன் ஹுசைன், கர்பலா போரில் வீரமரணம் அடைந்ததை நினைவு கூறும் வகையில் இஸ்லாமியர்கள் மொஹரம் நாளை அனுசரித்து வருகின்றனர்.

மொஹரம் - பிரதமர் வாழ்த்து!!!

இமாம் ஹூசைன் சமூக நீதிக்கு எதிராக போராடியவர். மொஹரம் நாளில் முஸ்லீம்கள் போர் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ளது.  இது பிரார்த்தனை காலமாக கருதப்படுகிறது. 

பிரதமர் மோடி வாழ்த்து:

உலகெங்கிலும் உள்ள முஸ்லீம்கள் இன்று மொஹரம் விழாவைக் கொண்டாடி வருகின்றனர்.  அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக மோடி ட்வீட் செய்துள்ளார்.  7ம் நூற்றாண்டின் புரட்சித் தலைவரும் முகமது நபியின் பேரனுமான இமாம் ஹூசைனின் தியாகங்களையும் உண்மையின் மீதான அவருடைய அர்ப்பணிப்பையும் அநீதிக்கு எதிரான அவரது போராட்டத்தையும் நினைவுகூரும் நாள் மொஹரம் என்று மோடி பதிவிட்டுள்ளார்.

அரவிந்தி கெஜ்ரிவால்:

மொஹரம் தினத்தில் கர்பலா போர் தியாகிகளின் தியாகங்களுக்கும் இமாம் ஹூசைனின் தியாகங்களுக்கும் தலைவணங்குவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.  இமாம் ஹூசைனின் தியாகங்களை நினைவுகூரவும் அவரது லட்சியங்களை பின்பற்றவும் மாநில மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் அரவிந்த் கெஜ்ரிவால்.

நிதிஷ் குமார்:

இமாம் ஹுசைனின் வாழ்க்கை எளிமை மற்றும் போராட்டத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு எனவும் உண்மை மற்றும் நீதிக்காக அவர் ஆற்றிய தியாகம் என்றும் நினைவுகூரப்படும் எனவும் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பதிவிட்டுள்ளார்.