மோட்டார் வாகன 3வது நபர் காப்பீட்டு தொகை 20% வரை உயர வாய்ப்பு!! - வாகன ஓட்டிகளில் பெரும் அதிர்ச்சி

மோட்டார் வாகனங்களுக்கான 3வது நபர் காப்பீட்டு தொகையை 1 முதல் 20 சதவீதம் வரை உயர்த்துவதற்கு மத்திய அரசு பரிந்துரைத்திருப்பது வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் வாகன 3வது நபர் காப்பீட்டு தொகை 20% வரை உயர வாய்ப்பு!! - வாகன ஓட்டிகளில் பெரும் அதிர்ச்சி

காப்பீட்டு தொகை உயர்வை இதுவரை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையம் அறிவித்து வந்தது.

இந்த நிலையில் முதன்முறையாக மத்திய நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சகம், மூன்றாம் நபர் மோட்டார் இன்சூரன்ஸ் பிரீமியத் தொகையை உயர்த்துவதற்கான வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மக்களிடையே எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் 3வது நபர் காப்பீட்டு தொகையை மத்திய அரசு உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் 2022 - 23 ஆம் ஆண்டுக்கான இன்ஸூரன்ஸ் பிரீமியம் தொகை 20 சதவீதம் அளவுக்கு உயர கூடும் என கூறப்படுகிறது. அதன்படி ஆயிரம் சிசி திறன் கொண்ட கார்களின் 3வது நபர் காப்பீட்டு பிரீமியம் தொகை 2 ஆயிரத்து 94 ரூபாயாகவும், ஆயிரம் முதல் ஆயிரத்து 500 சிசி திறன் கொண்ட கார்களின் பிரீமியம் தொகை 3 ஆயிரத்து 416 ரூபாயாகவும், ஆயிரத்து 500 சிசி திறனுக்கு மேற்பட்ட கார்களின் பிரீமியம் தொகை 7 ஆயிரத்து 897 ஆகவும் அதிகரிக்க உள்ளது.

இதே போல் இருசக்கர வாகனங்களின் பிரீமியம் தொகையும் அதிகரிக்க உள்ளது. இது புதிய பிரீமியம் தொகை நடைமுறை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா நெருக்கடியால் 3வது நபர் காப்பீட்டு பிரீமியம் தொகையில் எந்த வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்த நிலையில் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது