நேஷனல் ஹெரால்டு வழக்கு.. அமலாக்கத்துறை சோனியாவிடம் 11 மணி நேரம் விசாரணை!!

நேஷனல் ஹெரால்டு வழக்கு.. அமலாக்கத்துறை சோனியாவிடம் 11 மணி நேரம் விசாரணை!!

நேஷனல் ஹெரால்டு வழக்கில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாவிடம் நடத்தப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்தது.

நேஷனல் ஹெரால்டு பத்திரிகை: அமலாக்கத்துறை விசாரணை

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை வெளியிட்டு வந்த அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி, அவரது மகன் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களை இயக்குநர்களாக கொண்ட யங் இந்தியா நிறுவனம் கையகப்படுத்தியது. இதில் சட்டவிரோத பண பரிமாற்றம் நடந்தததாக கூறி, அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

சோனியா காந்தி ஆஜர்:

ஏற்கெனவே ராகுல்காந்தியிடம் 5 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து விசாரணைக்காக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியும், அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார்.

3 நாளாக நடைபெற்ற விசாரணை முடிவு:

இந்த நிலையில், 3 நாளாக நடைபெற்ற விசாரணை தற்போது முடிவுக்கு வந்தது. அவரிடம் மொத்தம் 11 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், 65 முதல் 70 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராட்டம் நடத்திய காங்கிரஸ் நிர்வாகிகளை, போலீசார் கைது செய்தனர்.