70லிருந்து 46ஆக குறைந்த நக்சல் ஆக்கிரமிப்பு மாவட்டங்கள்.......

70லிருந்து 46ஆக குறைந்த நக்சல் ஆக்கிரமிப்பு மாவட்டங்கள்.......

நக்சல் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 70லிருந்து 46ஆக குறைந்துள்ளதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியுள்ளார்.

நக்சல் ஆக்கிரமிப்பு:

2014ல் நக்சல் ஆக்கிரமிப்பு மாவட்டங்களின் எண்ணிக்கை 70ஆக இருந்தது.  2021ல் இதன் எண்ணிக்கை 46ஆக குறைந்துள்ளது.

2014ல் நக்சல் வன்முறை சம்பவங்கள் 1091ஆக இருந்துள்ளது.  ஆனால் தற்போது 509ஆக குறைந்துள்ளது என பெருமிதம் அடைந்துள்ளார் நித்யானந்த ராய்.

உள்துறை அமைச்சகத்தின் பல்வேறு மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் பிற துறை அமைச்சகங்களின் முயற்சியால் இதனை சாதிக்க முடிந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

திட்டங்கள்:

பாதுகாப்பு தொடர்பான செலவினத் திட்டம், சிறந்த உள்கட்டமைப்பு திட்டம், சிறப்பு மத்திய உதவி திட்டம், சாலை தேவை திட்டம், சாலை இணைப்பு திட்டம், திறன் மெம்பாட்டு திட்டங்கள், அதிக அளவில் பள்ளிகள் திறத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தியதன் மூலம் நக்சல் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் கூறியுள்ளார். 

ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள திட்டங்கள்:

சிறப்பு உள்கட்டமைப்புத் திட்டத்தின் கீழ் சிறப்பு படைகள், சிறப்பு புலனாய்வு பிரிவுகளை மேம்படுத்தி வலுப்படுத்துதல், 250 காவல் நிலையங்கள் கட்டுதல் போன்ற மேலும் பல திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை இணை அமைச்சர் கூறியுள்ளார்.

சேவை மையங்கள்:

நக்சல் அமைப்பால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி கிளைகளும் ஏடிஎம் களும் திறக்கப்பட்டுள்ளன.  மேலும் 5000க்கும் அதிகமான தபால் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.