ரபேல் கொள்முதல் விவகாரத்தில் ஊழல் நடைபெறவில்லை..! பாஜக விளக்கம்.! 

ரபேல் கொள்முதல் விவகாரத்தில் ஊழல் நடைபெறவில்லை..! பாஜக விளக்கம்.! 

ரபேல் விவகாரத்தில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி தவறான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை கூறி வருவதாக பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார். 

பிரான்சை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனம் ரபேல் விமானங்களைப் வாங்கித் தருவதற்கு இடைத்தரகராக செயல்பட்ட நிறுவனம் ஒன்றிக்கு 8 கோடி ரூபாய் தரகுத் தொகையாக கொடுத்ததாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளதா என்பதை விசாரிக்க பிரான்சு அரசு குழு ஒன்றை அமைத்துள்ளதாகவும் தகவல்கள் வந்தன. 

இந்நிலையில் இந்த முறைகேடு குறித்து ஒருங்கிணைந்த நாடாளுமன்ற குழு அமைத்து விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா வலியுறுத்தினார். காங்கிரசின் இந்தக் குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. இது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளித்த அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா, இவ்விவகாரத்தில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் பொய் கூறி வருவதாகத் தெரிவித்தார். ரபேல் கொள்முதல் விவகாரத்தில் ஊழல் நடைபெறவில்லை என்பதை உச்சநீதிமன்றமும், கணக்கு தணிக்கை துறையும் தெளிவுபடுத்தியுள்ளதையும் சுட்டிக் காட்டினார். இந்த விவாகரத்தில் தவறான தகவல்களைக் கூறி வரும் ராகுல்காந்தி,டசால்ட் ஏவியேசனின் போட்டி நிறுவனங்களுக்கா பிரசாரம் செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.