"ஐ லவ் யூ" என்று சொன்னால் குற்றமில்லை - மும்பை கோர்ட் அதிரடி தீர்ப்பு

"ஐ லவ் யூ" என்று யாரிடம் கூறுகிறோமோ அவருக்கு ஏதேனும் களங்கம் ஏற்பட்டால் மட்டுமே குற்றம் என மும்பை கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஐ லவ் யூ" என்று சொன்னால் குற்றமில்லை - மும்பை கோர்ட் அதிரடி தீர்ப்பு

மும்பையில் 17 வயது சிறுமியிடம் 22 வயது வாலிபர் ஒருவர் அவரை பின் தொடர்ந்து "ஐ லவ் யூ" என்று தன்னுடைய காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதனால், அந்த வாலிபர் மீது சிறுமியும், அவரது தாயும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதை எடுத்து அந்த வாலிபரை கைது செய்த போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் 2 வழக்குகள் பதிவு செய்து அந்த வாலிபரை நீதி மும்பை மன்றத்தில் ஆஜர் படுத்தினர். விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி,  ஒருவரிடம் மற்றொருவர்  "ஐ லவ் யூ" என்று கூறுவது அவரின் உணர்ச்சிகளை நாகரிகமாக வெளிப்படுத்துவது. பாதிக்கப்பட்டோருக்கு ஏதேனும் களங்கம் ஏற்பட்டால் மட்டுமே இது குற்றமாகும்.. ஆனால், அந்த வாலிபர் உள்நோக்கத்துடன் அல்லது சிறுமிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இதை செய்ததாக நிரூபிக்கப்படவில்லை என்று நீதிபதி கூறியுள்ளார். மேலும் அந்த வாலிபரை விடுவிக்க உத்தரவிட்டார்.