எதிர்க்கட்சிகள் தலிபான்களுக்கு ஆதரவு அளித்து இந்துக்களுக்கு எதிராக உள்ளனர்: யோகி ஆதித்யநாத் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் தலிபான்களுக்கு ஆதரவு அளிப்பதாகவும், ஹிந்துக்களுக்கு எதிராக உள்ளதாகவும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் தலிபான்களுக்கு ஆதரவு அளித்து  இந்துக்களுக்கு எதிராக உள்ளனர்: யோகி ஆதித்யநாத்  குற்றச்சாட்டு

தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அளித்த யோகி  ஆதித்யநாத் ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை. லக்கிம்பூர் விவகாரம் குறித்து விசாரணை துவங்கி உள்ளது. உரிய முறையில் இது நடக்கும். வரும் காலத்தில் பலர் கைது செய்யப்டுவர். லக்கிம்பூர் விவகாரம் அரசியலாக்கப்பட்டது அவமானத்திற்குரியது. எதிர்க்கட்சி தலைவர்கள் அரசியல் சுற்றுலா வருகின்றனர்.

கோவிட் காலத்தில் ராகுல், பிரியங்கா, அகிலேஷ் எங்கே சென்றனர். இந்தியா மற்றும் உபியின் வளர்ச்சிக்கு எதிராக எதிர்கட்சியின் செயல்பாடு உள்ளது. இவர்கள் தலிபான்களுக்கு ஆதரவாகவும் , ஹிந்துக்கள் மற்றும் பிராமணர்களுக்கு எதிராகவும் உள்ளனர். நாட்டின் பாதுகாப்பிற்கு எதிர்க்கட்சிகள் குந்திகம் விளைவிக்கிறது. காங்., முதல்வர்கள் இந்தியாவிற்கு எதிரான சக்திகளுடன் கைகோர்க்கின்றனர். அவர்கள், தங்களது நாற்காலியை காப்பாற்றுவதே நோக்கமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.