அடல் பாலத்தை திடீரென பார்வையிட்ட பிரதமர்!!!

குஜராத்தில் புதிதாக கட்டப்பட்ட 300 மீட்டர் நீளமான அடல் பாலத்தில் பிரதமர் திட்டமிடாமல் நடைபயணம் மேற்கொண்டார்.

அடல்  பாலத்தை திடீரென பார்வையிட்ட பிரதமர்!!!
குஜராத்தில் சபர்மதி ஆற்றின் மீது பாதசாரிகளுக்காக கட்டப்பட்ட அடல் பாலத்தில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை 'முன்கூட்டியே' நடைபயணம் மேற்கொண்டார். எல்இடி விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பாலத்தை பார்வையிட்டார். ஏறக்குறைய 300 மீட்டர் நீளமுள்ள இந்த பாலம் எல்லிஸ் பாலம் மற்றும் சர்தார் பாலம் இடையே கட்டப்பட்டுள்ளது.