நிலா வெளிச்சத்தில் தாஜ்மகாலை கண்டு ரசிக்க அனுமதி.!!

நிலா வெளிச்சத்தில் ரசிக்கும் வகையில் நாளை முதல் இரவு நேரத்தில் தாஜ்மகால் திறக்கப்பட உள்ளது.

நிலா வெளிச்சத்தில் தாஜ்மகாலை கண்டு ரசிக்க அனுமதி.!!

தொல்லியல் பராமரிப்பாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது உலக சிறப்பு மிக்க தாஜ்மகால். இதனை காண பல்வேறு நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

கொரோனா சூழல் காரணமாக கடந்த ஓராண்டாக இந்த நினைவு சின்னம் இரவு நேரத்தில் மூடப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் நாளை முதல் சுற்றுலா பயணிகள், இரவு நேரத்தில் நிலா வெளிச்சத்தில் தாஜ்மகாலை கண்டு ரசிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரவு 8 மணி முதல் 10 வரை மக்கள் தாஜ்மகாலுக்குள் அனுமதிக்கப்பட உள்ளனர். வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மக்களுக்கு அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.