டெல்லி கமிஷனராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

டெல்லி கமிஷனராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி

டெல்லி கமிஷனராக ராகேஷ் அஸ்தானா நியமிக்கப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கினை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான ராகேஷ் அஸ்தானா,  கடந்த ஜூலை மாதம் டெல்லி காவல்துறை ஆணையராக பொறுப்பேற்றார்.

அவர் ஓய்வு பெறும் வயதை அடைந்த போதும், ஒரு ஆண்டு பணிக்கால நீட்டிப்பு வழங்கி புதிய பொறுப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் அஸ்தானா நியமனம் விதிமுறை மீறல் என்றும், உச்சநீதிமன்றம் வழங்கிய பல தீர்ப்புகளை மீறும் வகையில் இருப்பதாகவும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன் வந்தது.  அப்போது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள்,  டெல்லி கமிஷனராக ராகேஷ் அஸ்தானா நியமனத்தை உறுதி செய்வதாகவும் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.