இந்தியா வருகிறார் வியட்நாம் பிரதமர்... காரணம் என்ன?

இந்த ஆண்டு இறுதியில் வியட்நாம் பிரதமர் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

இந்தியா வருகிறார் வியட்நாம் பிரதமர்... காரணம் என்ன?

இந்த ஆண்டு இறுதியில் வியட்நாம் பிரதமர் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  

வியட்நாம் பிரதமர் பாம் மின் சின், இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவுக்கு வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் பிரதமரான பிறகு அவர் இந்தியாவுக்கு வருவது இதுவே முதல்முறை ஆகும். இந்த பயணத்தின்போது, பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர் ஆலோசனை நடத்துகிறார்.

இதுகுறித்த தகவல்களை இந்தியாவுக்கான வியட்நாம் தூதர் தெரிவித்துள்ளார்.  டெல்லியில், தூதரக பகுதியில் அமைந்துள்ள கவுடில்யா மார்க் பூங்காவில் வியட்நாம் தேசத்தந்தை ஹோசிமின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் அவர் இதை கூறினார். மத்திய வெளியுறவுத்துறை ராஜாங்க மந்திரி மீனாட்சி லேகி, அச்சிலையை திறந்து வைத்தார். இதுபோல், வியட்நாம் நாட்டில் ஹோசிமின் நகரில் அக்டோபர் 2-ந் தேதி, மகாத்மா காந்தி சிலை திறந்து வைக்கப்படும் என்றும் பாம் சன் சாவ் தெரிவித்தார்