பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல - உத்தரபிரதேச அமைச்சர் விளக்கம்

பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல - உத்தரபிரதேச அமைச்சர் விளக்கம்

பொது சிவில் சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என உத்திர பிரதேச அமைச்சர் டேனிஷ் ஆசாத் அன்சாரி விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது சிவில் சட்டமானது இஸ்லாமியர்களுக்கு எதிரானது அல்ல என்றும், இதில் யாருடைய அரசியலமைப்பு உரிமைகளும் மீறப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், பொதுஜன இஸ்லாமியர்களின் குரலுக்கும் நாம் செவிசாய்க்க வேண்டும் என தெரிவித்த அவர் இதற்கு முன்னிருந்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் போன்ற அரசுகள் செய்யாத முன்னேற்றத்தை இஸ்லாமியர்கள் இன்று விரும்புவதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாமல் முந்தைய அரசுகள், இஸ்லாமியர்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்தியதாகவும்,  அதுமட்டுமல்லாமல் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதன் மூலம் சமூகத்தில் நல்ல மாற்றங்களை அரசு கொண்டு வரும் எனவும் கூறினார்.