”மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க உள்ளேன்” - தமிழிசை சௌந்தரராஜன்

”மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க உள்ளேன்” - தமிழிசை சௌந்தரராஜன்

காரைக்காலுக்கு காவிரியிலிருந்து ஏழு டி.எம்.சி நீர் வரவேண்டும் ஆனால் பூச்சியம் புள்ளி ஐந்து டி.எம்.சி தான் வந்திருப்பதாக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வருத்தம் தெரிவித்தார். 

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சபாநாயகர் செல்வம், அமைச்சர் சந்திரபிரியங்கா, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டார்கள்.

தொடர்ந்து காரைக்கால் மாவட்ட விவசாயிகளை தமிழிசை சௌந்தர்ராஜன் சந்தித்தார். அப்போது விவசாயிகள் காவிரி நீர் வராத காரணத்தால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநரிடம் விவசாயிகள் தெரிவித்தனர். இதற்கு நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்தார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்:-  

காரைக்காலுக்கு 7 டி.எம்.சி தண்ணீர் வரவேண்டும். இந்நேரம் 2.5 டிஎம்சி தண்ணீர் வந்திருக்க வேண்டும் ஆனால் 0.5 டிஎம்சி தான் வந்திருக்கிறது. இதனால் காவிரி நீர் மிகக்குறைந்த அளவே வந்துள்ளது கவலையளிக்கின்றது; நமக்கு தேவையான டி.எம்.சி தண்ணீரை பெற வலியுறுத்தி வருகிறோம்.

மேலும் இதுகுறித்து மத்திய அரசிடம் மேலும் அழுத்தம் கொடுக்க உள்ளேன். அதே நேரம் விவசாயிகள் பாதிக்காதவாறு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்",  என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க   |  டிடிஆர் உடன் பெண் பயணி கைகளை முறுக்கிக்கொண்டு மோதல்..!