நான் சிறந்த வயதான பெண்மணியா? பட்டத்தை நிராகரித்த ராணி 2-ம்எலிசெபெத்  

நடப்பாண்டின் சிறந்த வயதான பெண்மணி என்ற பட்டத்தை ராணி 2 ஆம் எலிசெபெத் நிராகரித்துள்ளார்.

நான்  சிறந்த வயதான பெண்மணியா? பட்டத்தை நிராகரித்த ராணி 2-ம்எலிசெபெத்   

நடப்பாண்டின் சிறந்த வயதான பெண்மணி என்ற பட்டத்தை ராணி 2 ஆம் எலிசெபெத் நிராகரித்துள்ளார்.

சிறந்த வயதான பெண்மணி என்ற பட்டத்தை பிரிட்டனை சேர்ந்த பத்திரிக்கை ஒன்று ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. இப்பட்டம் இதற்கு முன்னதாக ராணி 2 ம் எலிசெபெத்தின் தாய்க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராணி 2 ஆம் எலிசெபெத்தின் கணவர் ஃபிலிப்பின் மறைவையொட்டி நடப்பாண்டுக்கான சிறந்த வயதான பெண்மணி என்ற பட்டத்தை ராணிக்கே வழங்க பத்திரிக்கை நிர்வாகம் எண்ணியது.

இது குறித்து அரண்மனை அதிகாரிகளுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியது. இதற்கு பதிலளித்துள்ள ராணி 2 ஆம் எலிசெபெத், தகுதியான வேறு நபருக்கு இப்பட்டத்தை வழங்குமாறு கூறி, சிறந்த வயதான பெண்மணி என்ற பட்டத்தை நிராகரித்துள்ளார்.