அமலாக்கத் துறை அலுவலகம் நோக்கி ராகுல் காந்தி பேரணி !!

காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் இருந்து ராகுல் காந்தி அலமாக்கத்துறை அலுவலகத்திற்கு பேரணியாகவே சென்றடைந்துள்ளார்.

அமலாக்கத் துறை அலுவலகம் நோக்கி ராகுல் காந்தி பேரணி !!

நேஷனல் ஹெரால்டு பத்திரிகையின் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் 2 ஆயிரம் கோடி சொத்துக்களை, சோனியாகாந்தி, ராகுல்காந்தி இயக்குநர்களாக உள்ள யங் இந்தியா நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான சட்டவிரோத பணப்பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சம்மன் அனுப்பப்பட்டதன் அடிப்படையில்,

டெல்லியில் உள்ள மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ராகுல்காந்தி ஆஜராக  சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் , தடையை மீறி ராகுல் காந்தி காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி பேரணியை தொடங்கினார். அவருடன் பிரியங்கா காந்தி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் சென்ற நிலையில் அமலாக்கத்துறை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ராகுல் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதையடுத்து ராகுல் காந்தியில் வாகனம் மட்டும் அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.