கேரளாவில் ராகுல் காந்தியின் 2ம் நாள் பயணம் தொடக்கம்...!

கேரளாவில் ராகுல் காந்தியின் 2ம் நாள் பயணம் தொடக்கம்...!

இந்திய ஒற்றுமைக்கான பாரத் ஜோடா நடைபயணத்தை கேரளாவில் 2ம் நாளாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி தொடங்கியுள்ளார்.

இந்திய ஒற்றுமை பயணம்:

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி “பாரத் ஜோடோ யாத்ரா” என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை தொடங்கியுள்ளார். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை செல்லும் இந்த ஒற்றுமை நடைப்பயணம், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், மத்திய அரசுக்கு எதிராகவும் தொடங்கியதாக கூறப்பட்டது.

வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு:

கடந்த 7ம் தேதி கன்னியாகுமரியில் உள்ள காந்தி மண்டபம் முன்பு தொடங்கிய இந்த நடைப்பயணம் அகஸ்தீஸ்வரம், நாகர்கோவில், தக்கலை வழியாக நான்கு நாட்கள் தமிழகத்தில் பயணத்தை தொடர்ந்த ராகுல்காந்திக்கு, வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

இதையும் படிக்க: தெலுங்கு திரையுலகின் ”ரெபல் ஸ்டார் ” காலமானார்.. அரசியலிலும், சினிமாவிலும் தடம் பதித்தவர்.. !

தமிழகத்தில் பயணம் முடிவு:

தமிழகத்தில் கடந்த 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை மொத்தம் 4 நாட்கள் பயணம் செய்த ராகுல் காந்தி, 10 ஆம் தேதி இரவுடன் தனது தமிழ்நாடு பயணத்தை முடித்துவிட்டார். இந்த பயணத்தில் சுமார் தமிழகத்தில் மட்டும் ராகுல்காந்தி 56 கிலோ மீட்டர் நடந்ததாக காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

கேரளாவில் பயணம் தொடக்கம்:

இதனையடுத்து, கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி இரவு கேரள மாநிலத்திற்குள் அடியெடுத்து வைத்த அவர், பாறசாலையில் உள்ள செறுவாரக்கோணத்தில் ஓய்வெடுத்தார். இந்த நிலையில், 5ம் நாளான நேற்று, செறுவாரக்கோணத்தில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி ராகுல்காந்தி தனது நடைப்பயணத்தை தொடங்கினார். கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பியான ராகுல்காந்திக்கு அங்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.

கேரளாவில் 2 ஆம் நாள் பயணம்:

இதைத் தொடர்ந்து கேரளாவில் தனது 2ஆம் நாள் பயணத்தை திருவனந்தபுரத்தில் வெள்ளையானி பகுதியில் இருந்து ராகுல் காந்தி தொடங்கினார். இந்த பயணத்தில் ராகுலுடன் 300க்கும் மேற்பட்ட காங்கிரசார் நடைபயணம் மேற்கொண்டனர். 


உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் 17 நாட்களாக சிக்கி இருந்த தொழிலாளர்கள் 41 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி அருகே சில்க்யாரா பகுதியில் நான்கரை கிலோ மீட்டர் தொலைவுக்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி அன்று அதிகாலை 5 மணி அளவில் திடீரென சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில்  41 தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து பல்வேறு கட்ட மீட்பு பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவம் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். முதலில்  60 மீட்டர் தொலைவுக்கு 80 சென்டி மீட்டர்  விட்டம் கொண்ட குழாயைச் செலுத்தி தொழிலாளர்களை மீட்பதற்கான பணிகள் நடைபெற்றது. அப்போது 25 டன் எடைக் கொண்ட ஆகர் இயந்திரம் நிறுவப்பட்டுள்ள கான்கிரீட் தளத்தில் விரிசல் ஏற்பட்டதால், மீட்புப் பணிகள் தொடர்வதில் சிக்கல் நிலவியது.

பின்னர் விரிசல் சீர் செய்யப்பட்டு மீண்டும் பணிகள் தொடங்கப்பட்ட நிலையில் ஆகர் இயந்திரத்தின் பிளேடுகள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டது. இதனால் கிடைமட்டமாக குழாய் செலுத்தும் மீட்புப் பணிகள் முழுவதுமாக முடங்கியது.

மீதமுள்ள 10-12 மீட்டர் தொலைவுக்கு பணியாளர்களே நேரடியாக குழாயைச் செலுத்துவதற்கு இயந்திரத்தின் பிளேடை அகற்ற இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் கட்டுமானப் படைப்பிரிவைச் சேர்ந்த பொறியாளர்கள் குழு வீரர்கள் நிகழ்விடத்திற்கு விரைந்தனர். 

இதைத் தொடர்ந்து சுரங்கப் பாதை மணல் குவியலில் பக்கவாட்டில் தொடர்ந்து துளையிட டெல்லியில் இருந்து 24 சிறப்பு தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். மெலிந்த தேகம், உயரம் குறைவான இவர்கள் சமதளம், மலைப்பகுதியில் எலிவளை போல குடைந்து சிறிய அளவிலான சுரங்கம் தோண்டுவதில் வல்லவர்களாக இருந்ததால் 'எலி வளை' தொழிலாளர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

தொடர்ந்து, இந்த ஊழியர்கள் மேற்கொண்ட நடவடிக்கையால் சுரங்கப் பாதையில் மேற்கொள்ளப்பட்டு வந்த பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்தது. 

இதையடுத்து துளையிடப்பட்ட பகுதியில் இருந்து பைப்  வழியாக ஸ்டெரசச்ர் மூலமாக தேசிய பாதுகாப்பு படையினர் சென்று தொழிலாளர்களை ஸ்டெக்சர் மூலம் 5 பேர் என்ற முறையில் அடுத்தடுத்து 41 பேரையும் பத்திரமாக மீட்டனர்.  சுரங்கத்தில் இருந்து 17 நாட்களுக்கு பிறகு வெளியே வந்த தொழிலாளர்களை அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்டோர் ஆரத்தழுவி மகிழ்ச்சியுடன் வரவேற்றார். 

மீட்கப்பட்ட தொழிலாளர்கள் ஆம்புலன்ஸ்கள் மூலம் உத்தர்காசி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டதை தொடர்ந்து சுரங்கத்தின் வெளியே நீண்ட நாட்களாக காத்திருந்த அவர்களது உறவினர்கள் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்று வரும் நிலையில் நண்பகல் ஒரு மணி நிலவரப்படி 40 புள்ளி இரண்டு ஏழு சதவீத  வாக்குகள் பதிவாகியுள்ளன.

மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல்கள் இம்மாதம் நடைபெறுகிறது. இதில் மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், மிசோரம் ஆகிய 3 மாநிலங்களுக்கு தேர்தல் முடிவடைந்துள்ளது. ராஜஸ்தானில் இன்றும், தெலுங்கானாவில் வரும் 30-ந் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகின்றன..

ராஜஸ்தானில் ஆட்சியை தக்கவைக்க ஆளும் காங்கிரசும், மீண்டும் ஆட்சியை பிடிப்பதற்கு பாஜகவும் நேற்று முன்தினம் வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டன. மாநிலத்தின் மொத்தமுள்ள 200 தொகுதிளில் 199 இடங்களுக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கரன்பூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் உயிரிழந்ததால்  அந்த தொகுதியின் வாக்குப்பதிவு தள்ளிவைக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு பலத்த பாதுகாப்புகளுக்கிடையே தொடங்கியது.  அதிகாலை முதலேயே நீண்ட வரிசையில் நின்று மக்கள், வாக்களித்து தங்களது ஜனநாயக கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர். பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.

ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஷ்ரா, மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா,  முதலமைச்சர் அசோக் கெலாட் ஆகியோர் வாக்களித்தனர்.

இந்த நிலையில் நண்பகல் ஒரு மணி நிலவரப்படி 40.27 % சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இதையும்  படிக்க  | வைரஸ் காரணமாக இருமல் பாதிப்பு அதிகரிப்பு - மா.சுப்பிரமணியன்

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது :- 

"ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தம் உள்ள 200 தொகுதிகளுக்கு  சனிக்கிழமை சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

இங்கு ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் அசோக் கெலாட், ஆளும் காங்கிரஸ் அரசை கவிழ்க்க வேண்டும் என்ற பாஜக கட்சியின் முயற்சி பலன் அளிக்க வில்லை", என்று தெரிவித்துள்ளார்.   

இதையும் படிக்க | தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிராகரிக்க முடியாது எனக்கூறி ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

14 மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 198 பக்க மனுவை தமிழ்நாடு அரசு தாக்கல் செய்தது. இவ்வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.  சந்திரசூட் அமர்வு முன் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது 2021ம் ஆண்டில் இருந்து மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாகவும், குற்றவழக்கில் கூட நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் அனுமதிகோரி கெஞ்சும் நிலை உள்ளது என தமிழ்நாடு அரசு சார்பில் வாதிடப்பட்டது.

இந்நிலையில் மசோதாக்களை எத்தனை நாட்களுக்குத்தான் ஆளுநர் இப்படி கிடப்பில் போட்டிருப்பார்? எனவும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது எனவும் தலைமை நீதிபதி கருத்து தெரிவித்த அவர் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது குடியரசுத்தலைவருக்கு அனுப்ப வேண்டுமே தவிர கிடப்பில் போடக்கூடாது எனவும் அவர் கூறினார்.

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியமானவை என தெரிவித்த நீதிபதிகள், சட்டப்பேரவை கூட்டப்பட்டது சரியல்ல எனக்கூறி 4 மசோதாக்களை நிலுவையில் வைத்திருக்க முடியாது எனவும் கண்டனம் தெரிவித்தார்.

தொடர்ந்து வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் நோட்டீஸ் பிறப்பித்த உச்சநீதிமன்றம், வழக்கு விசாரணையை தீபாவளி விடுமுறைக்குப் பிறகு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

மிசோரம் மற்றும் சத்தீஷ்கர் மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெற்றது. தீவிரவாத அச்சுறுத்தல் மற்றும் நக்சல் பாதிப்பு என்ற காரணிகளை கடந்து இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்துள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்கான தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, மிசோரம், சத்தீஸ்கர் மாநிலங்களில் தேர்தல் நடைபெற்றது.

40 தொகுதிகள் கொண்ட மிசோரம் மாநிலத்தில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவில், வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.  இங்கு ஆளும் மிசோ தேசிய முன்னணி, சோரம் மக்கள் இயக்கம், பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி கட்சிகள் இடையே போட்டி நிலவுகிறது. 

வன்முறை நிகழ்வுகளை தடுத்திடும் வகையில் மாநிலம் முழுவதும் 9 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில், அய்ஸ்வால் தொகுதியில் முதலமைச்சர் ஜொராம் தங்கா தனது வாக்கை பதிவு செய்தார்.  இந்த தேர்தலில் 78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதேபோல், 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக 20 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. நக்சல் அச்சுறுத்தல் உள்ள 10 தொகுதிகளுக்கு காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும், எஞ்சிய 10 தொகுதிகளுக்கு காலை 8 மணிக்கு மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. 

மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்கு செலுத்தினர் வாக்குபதிவு முடிந்தவுடன் மின்னணு எந்திரங்கள்  சீல் வைக்கப்பட்டு வாக்கு  எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.  மாலை 5 மணிக்கு நிறைவடைந்த தேர்தலில், 70 சதவீத  வாக்குகள் பதிவானதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

முன்னதாக சுக்மா மாவட்டத்தில் உள்ள மின்பா பகுதியில் நக்சல்கள் உடனான துப்பாக்கிச் சண்டையின்போது பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடதக்கது.