ராஜஸ்தான், சத்தீஸ்கா் மாநிலங்களில் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ராஜஸ்தான், சத்தீஸ்கா் மாநிலங்களில்  2-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலுக்கான 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. 

200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் சட்டப்பேரவைக்கு நவம்பா் மாதம் 25-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ராஜஸ்தான் தேர்தலில் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

இதில் 43 வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர். எஞ்சிய தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலையும் காங்கிரஸ் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் சத்தீஸ்கா் மாநிலத்திலும் 2-ம் கட்ட வேட்பாளா் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதில் 7 வேட்பாளா்கள் இடம்பெற்றுள்ளனா். 

இதையும் படிக்க   |  பெரியார் குறித்து அவதூறு பரப்பிய பா.ஜ.க. பிரமுகர் கைது..!