ராஜிவ் காந்தி தேசிய பூங்கா பெயர் மாற்றம் - காங்கிரசை சீண்டும் பாஜக!

அசாமில் உள்ள ராஜிவ் காந்தி தேசிய பூங்காவின் பெயரை, ஒராங் தேசிய பூங்கா என மாற்றுவதற்கு அம்மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் நினைவாக வழங்கப்பட்ட விளையாட்டுத்துறைக்கான கேல் ரத்னா விருதின் பெயர் அண்மையில் மாற்றப்பட்டது எதிர்கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக அறிக்கை வௌியிட்டுள்ள அசாம் அரசு, வங்காள புலிகள் அதிகம் கொண்ட தேசிய பூங்காவின் பெயரை ஒராங் தேசிய பூங்கா என மாற்றி அமைக்க ஆதிவாசிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து தொடர் கோரிக்கை வந்ததாக கூறப்பட்டுள்ளது.  அசாமில் காங்கிரஸின் தருண் கோகாய் தலைமையிலான ஆட்சியின் போது, இந்த சரணாலயத்தின் பெயர் ராஜிவ் காந்தி தேசிய பூங்கா என பெயர்மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.