மாணவர்கள் பெற்ற அனைத்து கல்வி கடன்களும் ரத்து செய்து அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ரங்கசாமி...

பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழகத்தில் மாணவர்கள் பெற்ற அனைத்து கல்வி கடன்களும் ரத்து செய்யப்படும் என்று புதுச்ரேி  முதலமைச்சர் ரங்கசாமி  அறிவித்தார். 

மாணவர்கள் பெற்ற அனைத்து கல்வி கடன்களும் ரத்து  செய்து அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ரங்கசாமி...

சட்டப்பேரவையில் பேசிய அவர் பயிற்சி மருந்துவ மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 5 ஆயிரம் உதவித்தொகை 20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் எனவும் கூறினார். மேலும் புதுச்சேரிக்கு மேலும் 500 கோடி கூடுதல் நிதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளதாகவும், , புதுச்சேரியிக்கான மாநில அந்தஸ்து குறித்து மீண்டும் மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என குறிப்பிட்ட ரங்கசாமி, புதுச்சேரியில் பாசிக், பாஸ்ப்கோ நிறுவனங்களை மீண்டும் சிறப்பாக நடத்துவதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார், 

புதுச்சேரியில் தியாகிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வுதிய தொகை 9 ஆயிரத்தில் இருந்து ரூ 10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என உறுதியளித்த முதலமைச்சர் ரங்கசாமி, நடப்பு நிதியாண்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி 2 கோடி வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

 பல்வேறு துறைகளில் பணியாற்றும் தினக்கூலி ஊழயர்களுக்கு 10 ஆயிரத்திற்கு குறையாமல் ஊதியம் வழங்கப்படும் எனவும் சுகாதார துறையில் பத்தாண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனவும், முதலமைச்சர்  தெரிவித்தார்,