ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 40% பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ் ரீடெய்ல்...

ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 40 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனம் தனதாக்கியுள்ளது.

ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் 40% பங்குகளை வாங்கியது ரிலையன்ஸ் ரீடெய்ல்...

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் சில்லறை நிறுவனம் ரிலையன்ஸ் ரீடெய்ல். இதன் தலைமை செயல் அதிகாரியாக இருப்பவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் வர்த்தகத்தை தொடர்ந்து பல துறைகளில் விரிவாக்கம் செய்து வருகிறார் முகேஷ் அம்பானி.

அதன் ஒரு பகுதியாக லோக்கல் சர்ச் இன்ஜின் மற்றும் விற்பனையாளர்கள் டேட்டாபேஸ் நிறுவனமான ஜஸ்ட் டயல் நிறுவனத்தின் சுமார் 3 ஆயிரத்து 947 கோடி மதிப்பிலான, 40 புள்ளி 95 சதவீத பங்குகளை ரிலையன்ஸ் ரீடெய்ல் கைப்பற்றியுள் ளது.மேலும் 26 சதவீத பங்குகளை நிறுவன கைப்பற்றல் விதிகள் கீழ் செபி ஒப்புதல் அளித்த பின் வாங்க உள்ளது என ரிலையன்ஸ் ரீடைல் தெரிவித்துள்ளது.