கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்வு...!

கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் உயர்வு...!

நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை பூஜ்ஜியம் புள்ளி 5 சதவீதமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.

7 சதவீதத்தை கடந்த நாட்டின் பணவீக்கம்:

ரிசர்வ் வங்கியின் கணிப்பையும் மீறி, நாட்டின் பணவீக்கம் 7 சதவீதத்தை கடந்துள்ளது. இதற்கு உக்ரைன் போர் மற்றும் கொரோனா பரவல் காரணமாக கருதப்பட்ட நிலையில், அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியதும், ரூபாய் மதிப்பு இழக்க செய்து பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. 

ரிசர்வ் வங்கி முயற்சி:

இருப்பினும், பணவீக்கத்தை 6 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்த இலக்கு வைத்து ரிசர்வ் வங்கி அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. நேற்று முன்தினம் நடைபெற்ற, நடப்பு நிதியாண்டின் 3வது நிதிக்கொள்கை கூட்டத்தில் பணவீக்கத்தை கட்டுப்படுத்த  சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

இதையும் படிக்க: ”ஓசி பேருந்து பயணம்” சொன்ன அமைச்சர்... இப்ப அப்படியே பிளேட்ட மாத்திட்டாரு...!

ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு:

இந்தநிலையில் இன்று மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், உக்ரைன் போரால் உலக பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் பணவீக்கத்தை கட்டுப்படுத்த கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 50 புள்ளிகள் வரை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5 புள்ளி 4ல் இருந்து 5 புள்ளி 9 சதவீதமாக உயர்வதாகவும் கூறினார். 

நிபுணர்கள் கணிப்பு:

ஆனால், நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து 4வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளதால், வீடு, வாகனம் உள்ளிட்ட கடன்களின் வட்டி வகிதம் மற்றும் தனிநபரின் தவணை தொகை அதிகரிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.