தலைநகரில் குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி...

குடியரசு தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் ராணுவ ஒத்திகை அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைநகரில் குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி...

குடியரசு தின விழா வருகின்ற 26-ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் அரசு சார்பில் குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

டெல்லியில ஒத்திகை அணிவகுப்பை ராணுவ வீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். கொட்டும் பனியிலும் ராணுவ வீரர்கள் கலந்து கொண்டு அணிவகுப்பு ஒத்திகையை மேற்கொண்டனர்.

கடும் குளிரிலும் உற்சாகத்துடன் ராணுவ வீரர்கள் தங்கள் கனத்த காலணிகளுடன் வீறுநடை போட்டு அசத்தினர்.

மேலும் படிக்க | ஆளுநருக்கு எதிராக அரசின் பிரதிநிதிகள் மனு...டெல்லி பறந்த ஆர்.என். ரவி!