பொய் குற்றச்சாட்டின் பேரில் தன்னை கைது செய்ய வேண்டாம் - ஆர்யன் கான் வழக்கு விசாரணை அதிகாரி வேண்டுகோள்

பொய்யான குற்றச்சாட்டின் பேரில் தன்னை கைது செய்ய வேண்டாம் என போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வாங்க்டே, மும்பை போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளார்.  

சொகுசு கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஷாரூக்கான் மகன் ஆர்யன் கான் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்தநிலையில், அவ்வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள பிரபாகர் என்பவர், என்சிபி மண்டல இயக்குனர் சமீர் வாங்க்டே மீது பரபரப்பு குற்றச்சாட்டினை விடுத்திருந்தார்.

அதில் அவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறியதோடு, ஆர்யன் கானை வழக்கில் இருந்து விடுவிக்க  லஞ்சம் கேட்கும் வகையில் வெள்ளைதாளில் கையொப்பம் பெறப்பட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

 இந்நிலையில், இந்த பொய்யான குற்றச்சாட்டின் பேரில், தன்னை கைது செய்ய வேண்டாம் என சமீர் வாங்க்டே கூறி போலீசாருக்கு கடிதம் எழுதியுள்ளார். தன்னை பணியிலிருந்து நீக்குவது தொடர்பாக மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் அதில் கூறியுள்ளார்.