சபரிமலை கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் 12ம் தேதி திறக்கப்படும்- தேவஸ்தானம்

கேரளா மாநிலம் சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து கோவிலின் நடை அடைக்கப்பட்டது.

சபரிமலை கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் 12ம் தேதி திறக்கப்படும்- தேவஸ்தானம்

கேரளா மாநிலம் சபரிமலையில் மகரவிளக்கு பூஜை நிறைவடைந்ததை தொடர்ந்து கோவிலின் நடை அடைக்கப்பட்டது.

மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் நிறைவடைந்ததை முன்னிட்டு வழக்கமான பாரம்பரிய நிகழ்வாக கோவில் சாவி மற்றும் பணக்கிழியை சங்கர் வர்மாவிடம், மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி ஒப்படைத்தார்.

இதை தொடர்ந்து 18-ம் படி வழியாக திருவாபரண பெட்டிகள் சன்னிதானத்தின் கீழ் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு பந்தளம் அரச குடும்ப பிரதிநிதி சங்கர் வர்மா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பந்தளம் அரண்மனை நோக்கி ஊர்வலமாக புறப்பட்டது.

மேலும் மாசி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை மீண்டும் அடுத்த மாதம் 12-ந் தேதி திறக்கப்படும் என தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.