சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு... தடுப்பூசி போட்டதற்கான சான்று கட்டாயம்...

புரட்டாசி மாத பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று  மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு... தடுப்பூசி போட்டதற்கான சான்று கட்டாயம்...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, புரட்டாசி மாத பூஜைகளுக்காக இன்று மாலை திறக்கப்படுகிறது. வருகிற 21ம் தேதி வரை கோவிலில் பூஜைகள் நடைபெற உள்ளன. தினசரி நெய்யபிஷேகம், ப டி பூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். 

கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வு காரணமாக தினசரி 15 ஆயிரம் பக்தர்கள், ஆன்லைன் முன்பதிவு அ டிப்படையில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அதற்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர். டி.பி.சி.ஆர் நெகட் டிவ் சான்றிதழ் அல்லது கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டதற்கான சான்றிதழ் கண் டிப்பாக கொண்டு வர வேண்டும் என்றும், இல்லையெனில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.