தொழில்நுட்பத்திற்கு ஏற்றார் போல் பாதுகாப்பை மாற்ற வேண்டும் - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றார் போல், நாட்டில் பாதுகாப்பு கட்டமைப்பையும் மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக, அக்னிபத் திட்டம் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்பத்திற்கு ஏற்றார் போல் பாதுகாப்பை மாற்ற வேண்டும் - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்

அக்னிபத் திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பெரும் எதிர்ப்பலை எழுந்துள்ள நிலையில், அக்னிபத் திட்டத்துக்கு ஆதரவாக அஜித் தோவல் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவத்தில் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றார் போல், நவீன உபகரணங்கள், அமைப்புகள், கட்டமைப்புகள், மனிதவளம் ஆகியவை தேவைப்படுவதாகவும், தற்போதைய தொழில்நுட்பம் மற்றும் கொள்கைகளில் மாற்றம் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இளைஞர்கள் அதிகம் இருக்கும் இந்தியாவில், வயது முதிர்ந்தவர்கள் ராணுவ சேவையாற்றுவது அர்த்தமற்றது எனக் குறிப்பிட்ட அவர், இந்தியாவை பாதுகாப்பானதாகவும் வலிமையானதாகவும் மாற்றுவதே முதன்மையானது எனத் தெரிவித்துள்ளார்.