உரி எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல்..? தொடரும் தேடுதல் வேட்டை...

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையம் செல்போன் சேவை ரத்து

உரி எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவல்..? தொடரும் தேடுதல் வேட்டை...

ஜம்மு காஷ்மீரின் உரி எல்லைக் கட்டுப்பாட்டுப் கோட்டு பகுதியில் அதிகளவு பயங்கரவாதிகள் ஊடுருவியிக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில் 30 மணி நேரத்துக்கு  மேலாக தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. 

கடந்த 2016ம் ஆண்டு  செப்டம்பர் மாதம் 18 ம் நாள் உரி ராணுவ முகாமில் பயங்கரவாதிஅள் நடத்திய தாக்குதலில் 19 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் அதே பகுதியில் மீண்டும் ஒரு தாக்குதல் நிகழ்த்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக அதிக எண்ணிக்கையில் ஊடுருவியுள்ளதாகவும் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

ஊடுருவிய பயங்கரவாதி ஒருவர் நிகழ்த்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்பகுதியில் 30 மணி நேரத்தைக் கடந்தும் தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செல்போன் மற்றும் இணைய சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.