சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்தது பாட்னா உயர்நீதிமன்றம்....!

சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்தது  பாட்னா உயர்நீதிமன்றம்....!

பீகார் மாநில அரசின் சாதிவாரிக் கணக்கெடுப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்து பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நாட்டிலேயே முதன்முதலில் சாதிவாரியாக கணக்கெடுக்கும் பணியை கடந்த ஜனவரி மாதம் தொடங்கி பீகார் முன்னெடுத்தது. இரு கட்டமாக நடைபெற்ற இப்பணிகளில் வீடுகள் வாரியாக கணக்கெடுப்பும் பணி ஜனவரி 21ம் தேதி நிறைவுற்றது.

மேலும், சமூகப்பாதுகாப்பு தொடர்பான தகவல்களைப் பெறும் பணி,  மே மாதத்தில் நிறைவடைய திட்டமிடப்பட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து இந்த கணக்கெடுப்பை எதிர்த்து தொடரப்பட்ட 5 பொதுநல வழக்குகளும் இன்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாக மனுதாரர் தரப்பு தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க   | என்.எல்.சி. நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் ...!