ஆளுநரின் கருத்துகளுக்கு பதிலளிக்க மறுத்த சபாநாயகர்!!!!

ஆளுநரின் கருத்துகளுக்கு பதிலளிக்க மறுத்த சபாநாயகர்!!!!

கேரளா சட்டப்பேரவையின் பத்து நாள் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது.  காலவதியான 11 அவசர சட்டங்களை மாற்றுவதற்கான மசோதாக்கள் சட்டப்பேரவை நிகழ்ச்சி நிரலில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவசர சட்டங்கள் காலாவதியாவதனால் முன்கூட்டியே சட்டசபை கூட்டப்படுவதாக கேரளா சபாநாயகர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

சில அவசர சட்டங்களை வெளியிட இயலாத காரணத்தால் முன்கூட்டியே அமர்வை நடத்துகிறோம் என சபாநாயகர் கூறியுள்ளார்.

கேரளாவின் ஆளுநர் ஆரிப் முகமது கான் 11 சட்டங்கள் முறையாக ஆய்வு செய்யப்படாததால் அனுமதி அளிக்க மறுத்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  ஜனநாயகத்திற்கு எதிரானது என்பதால் அவற்றை வெளியிட அனுமதி மறுப்பதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

சட்டங்கள் நடைமுறைக்கு எதிரானதாகவும் சட்டமன்றத்தின் அங்கீகாரம் இல்லாமல் அதனை பிரகடனப்படுத்துவதற்கு அதிகாரம் இல்லாததாலும் அனுமதி மறுக்கப்பட்டதாக ஆளுநர் மேலும் கூறியுள்ளார்.

கண்ணூர் பல்கலைக் கழக துணைவேந்தர் தொடர்பான ஆளுநரின் கருத்துகள் குறித்து கருத்து தெரிவிக்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளார்.  மேலும் “நான் அரசியலமைப்பு பதவியை வகிக்கிறேன்.  ஆளுநரும் அரசியலமைப்பு பதவியை வகிக்கிறார்.  அரசியலமைப்பு பதவியில் இருக்கும் ஒருவரது கருத்துக்கு கருத்து தெரிவிக்கவோ பதிலளிக்கவோ எனக்கு விருப்பமில்லை” என ராஜேஷ் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: ராகுல் கேட்ட நான்கு கேள்விகள்!!!பதிலளிப்பாரா பிரதமர்....!