போலீசார் நடத்திய தடியடியில் ப.சிதம்பரம் கையில் எலும்பு முறிவு.. நலமுடன் இருக்கிறேன் என ட்விட்!!

போலீசார் நடத்திய தடியடியில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், தாம் நலமுடன் இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

போலீசார் நடத்திய தடியடியில் ப.சிதம்பரம் கையில் எலும்பு முறிவு.. நலமுடன் இருக்கிறேன் என ட்விட்!!

நேஷனல் ஹெரால்டு வழக்கில், டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ராகுல்காந்தி ஆஜரானார்.

அப்போது காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில், இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை ராகுல் காந்தியுடன் கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் பேரணியாக சென்றனர்.

இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுத்திருந்த நிலையில், அதில் பங்கேற்றவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர்.

அப்போது கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டதில், காங்கிரஸ் பொதுச் செயலாளரும், எம்.பியுமான கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பிரமுகர்கள் சிலர் லத்தியால் கொடூரமாக தாக்கப்பட்டனர். காவலர்களின் தள்ளுமுள்ளில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு விலா எலும்பு முறிந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் காவலர்கள் தன் மீது தாக்குதல் நடத்தியதில் தனக்கு லேசான எலும்பு முறிவே ஏற்பட்டுள்ளதாவும், தாம் நலமுடன் இருப்பதாகவும் ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், 10 நாட்களில் இது தானாக சரியாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும், இதனால் வழக்கம் போல் பணியை தொடர உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.