மத்திய அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை... மீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்க போவதாக விவசாய சங்கங்கள் எச்சரிக்கை!!

மத்திய அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டி, வரும் 21ம் தேதி நாடு தழுவிய அளவில் மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

மத்திய அரசு வாக்குறுதியை நிறைவேற்றவில்லை... மீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்க போவதாக விவசாய சங்கங்கள் எச்சரிக்கை!!

மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைப் பகுதிகளில், கடந்த ஒரு வருடமாக  விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தின. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு வாபஸ் பெற்றது. மேலும் விளைபொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதார விலைக்கு மசோதா கொண்டு வருவது பற்றி ஆராய குழு அமைக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய அரசு அளித்திருந்தது. இதையடுத்து பஞ்சாப் உள்ளிட்ட மூன்று மாநில விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்நிலையில், 3 மாதங்களுக்குப் பிறகும் மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என குற்றம்சாட்டியுள்ள விவசாய சங்கங்கள், வரும் 21ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளன. டெல்லியில் நடைபெற்ற 40 விவசாய சங்கங்கள் அடங்கிய சம்யுக்தா கிசான் மோர்ச்சா கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.