சிக்னலில் நிற்காமல் சென்ற பாஜக எம்எல்ஏவின் மகள்..! போக்குவரத்து காவலர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல்..!

கர்நாடகாவில் சிக்னலில் நிற்காமல் சொகுசு காரில் வேகமாக சென்ற பாஜக எம்எல்ஏவின் மகள், போக்குவரத்து காவலர்களிடம் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

சிக்னலில் நிற்காமல் சென்ற பாஜக எம்எல்ஏவின் மகள்..! போக்குவரத்து காவலர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரல்..!

கர்நாடகா பாஜக எம் எல்ஏவான அர்விந்த் நிம்பவாலி மகள் அண்மையில் சொகுசு காரில் சிக்னலில் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரை தடுத்து நிறுத்திய போக்குவரத்து காவலர்கள் அபராதம் கேட்டுள்ளனர்.

ஆனால் அப்பெண் தான் எம். எல்.ஏவின் மகள் என கூறியதோடு, எம். எல்.ஏ வாகனங்கள் சிக்னலில் நிற்க வேண்டிய தேவை இல்லை எனவும் வாக்குவாதம் செய்துள்ளார்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்படவே, இதனை படம் பிடிக்க முயன்ற கேமராமேன் மற்றும் பத்திரிகையாளரையும் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். இருப்பினும் அபராதம் செலுத்திய பிறகே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.