போக்குவரத்து நெரிசலினால் ஓடியே சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்!!!

போக்குவரத்து நெரிசலினால் ஓடியே சென்று நோயாளியின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்!!!

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய மருத்துவர் ஒருவர் நோயாளியின் உயிரைக் காப்பாற்ற மூன்று கிலோமீட்டர் ஓடி, சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்று நோயாளிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து அவரைக் காப்பாற்றியுள்ளார். 

மருத்துவர் கோவிந்த் காரை விட்டுவிட்டு மருத்துவமனையை நோக்கி ஓடி சரியான நேரத்தில் வந்து நோயாளிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்துள்ளார். அவர் காத்திருந்திருந்தால் நெரிசலில் இருந்து வெளியேறவே மேலும் 45 நிமிடங்கள் எடுத்திருக்கும். 

இச்சம்பவம் ஆகஸ்ட் 30ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது. இங்கு மருத்துவர் கோவிந்த் நந்தகுமார் காஸ்ட்ரோஎன்டாலஜி அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். அவர் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி ஒரு நோயாளியின் அவசர சிகிச்சைக்காக சர்ஜாபூரில் உள்ள மணிபால் மருத்துவமனைக்குச் சென்று கொண்டிருந்தார். ஆனால் கடைசி நிமிடத்தில் அவரது கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.  

நெரிசலில் சிக்கிய பிறகு டாக்டர் கோவிந்த், மருத்துவமனைக்குச் செல்ல 45 நிமிடங்கள் ஆகும் என்று கூகிள் மேப்பின் மூலம் தெரிந்து கொண்டுள்ளார். இதைத் தொடர்ந்து, மருத்துவமனையின் தூரத்தை சரிபார்த்தபோது அது சுமார் மூன்று கிலோமீட்டர்களைக் காட்டியுள்ளது.

இதனையடுத்து, டாக்டர் கோவிந்த் காரை விட்டு மருத்துவமனை நோக்கி ஓடியுள்ளார். சரியான நேரத்தில் வந்து நோயாளிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சையும் செய்துள்ளார். தன்னைத் தானே கட்டுக்கோப்பாக வைத்திருப்பதால்தான் இவ்வளவு தொலைவு ஓட முடிந்தது என்று கூறியுள்ளார் மருத்துவர் கோவிந்த். 

இதையும் படிக்க: எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணையாத ஜகன்மோகன், நிதின், மாயாவதி!!! காரணம் என்ன??