குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டவில்லை : சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டவில்லை : சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

கொரோனா பரவலுக்கு பின் இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும்பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு கீழானோருக்கும் பக்கவிளைவின்றி தடுப்பூசி செலுத்துவது குறித்து பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மத்திய அரசிடம் போதுமான அளவு தடுப்பூசிகள் இருப்பதாகவும்,  இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை துவங்க வெளிநாட்டு மருந்து நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவித்தார். ஆனால் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும், அதுதொடர்பாக விரிவான திட்டத்தை வகுக்க மருத்துவ நிபுணர்களுடன் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறினார்.